இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ். புத்தூரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ். புத்தூரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்-72nd Army Anniversary-Stationery Items for Students-Puttur Jaffna

புத்தூர் மடிகை பஞ்சசீல மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களிற்கு பாடராலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு 52ஆவது கால காலாட் படைப்பிரிவினுடைய நெறிப்படுத்தலிலும் 522  காலாட் படைப்பிரிவு மற்றும் அதற்கு கீழ் காணப்படுகின்ற 15ஆவது கஜபாகு படையணியினரும் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.

புத்தூர் பிரதேசத்தின் பாடசாலை கல்வி கற்கும் மாணவ மாணவிகள் 45 பேருக்கு ரூபா 3,500 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் புத்தூர் மடிகை பஞ்சசீல மகாவித்தியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

52ஆவது காலாட் படைப்பிரிவின் சேனாதிபதி பிரிக்கேடியர் சந்தன விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வேண்டகோளுக்கு அமைவாக வணக்கத்திற்குரிய வாரியபொல வடுகெதர சாரணாந்த சுவாமிகள், பிரபல வியாபாரி மஞ்சுள தர்மசேன, பியகம சுப்ரிம் அமைப்பின் சுரேஷ் சந்ரபால, கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தின் 98 ஆவது பழைய மாணவர் சங்கத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

காலத்தின் தேவை கருதி அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அனைத்து மத மதகுருக்கள் 52காலாட் படைப்பிரிவினுடைய படைத்தளபதி;, 522 ஆவது காலாட் படைப்பிரிவினுடைய படைபிரிவுத்தளபதி, இராணுவ உயரதிகாரிகள், பிரதேச பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் , இராணுவ வீரர்கள் மற்றும்  உட்பட குறிப்பிட்ட அளவினர் கலந்து கொண்டிருந்தனர். 

Sun, 10/10/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை