ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நால்வர் மாயம்

4 Fishermen Missing

- வாழைச்சேனை பொலிஸில் புகார்

செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகு தொடர்பில் நேற்று வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் எம்.எஸ். அன்வர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த படகில் நான்கு பேர் சென்றதாகவும் படகு நீலநிறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.வி.ரிஸ்கான், எம்.எச்.முஹம்மட், ஏ.எம்.றியாழ், கே.எம்.ஹைதர் ஆகியோர் சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை.

குறித்த படகு தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைக்கும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 065225709 என்ற இலக்கத்துடன் அல்லது படகு உரிமையாளரின் தொலைபேசி இலக்கமான 0779581915 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Mon, 10/11/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை