பிரதமருடனான பேச்சு ஒத்திவைக்கப்பட்டது

பிரதமருடனான பேச்சு ஒத்திவைக்கப்பட்டது-Teachers' Union Talk with PM Postponed

- இன்று இடம்பெறாது என்கிறார் ஸ்டாலின்

ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பிரதமரின் அலுவலகத்திலிருந்து குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்றையதினம் (11) அமைச்சரவை கூட்டம் இடம்பெறுவதால் இது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் தங்களுக்கு நேரம் வழங்கப்படலாமென தமது சங்கம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்களா என கல்வியமைச்சின் செயலாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீண்ட காலத்தின் பின்னர் தமது மாணவர்களை காண்பதற்காக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நிச்சயம் சமுகமளிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 10/11/2021 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை