கொழும்பு துறைமுக நகரம் டிசம்பரில் மக்களுக்காக திறப்பு

கொழும்பு துறைமுக நகரம் டிசம்பரில் மக்களுக்காக திறப்பு-Colombo Port City Open on December

தெற்காசியாவின் கேந்திரமாக திகழும் கொழும்பு துறைமுக நகரம் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மக்களுக்காக திறக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதாரத்துறையின் போட்டித்தன்மைக்கான கேந்திரமாக திகழவுள்ள கொழும்பு துறைமுக நகரம் கடல் நிரப்பப்பட்டு 269 ஹெக்டயார் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் இந்து சமுத்திர வாயிலாக அமையப் பெற்றுள்ள எழில் மிகுந்த சிறந்த வர்த்தக மத்திய கேந்திரமாக மேற்படி துறைமுக நகரம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

சைனா ஹாபர் என்ஜினியரிங் கம்பெனி அதற்கான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது 99 வீதம் நிறைவடைந்துள்ளதாக துறைமுக நகர இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/11/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை