வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்த்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களினதும் பெற்றோலிய பொருட்களினதும் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதற்கு தேசிய மட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் 15 நாள் எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நடத்தப்படவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ், ஜாமியத் உலமா ஈ ஸலாம், ராவல்பிண்டி மேயர் சர்தார் நஸீம்கான், ஜேயுஎல்-எப் தலைவர் ஸயுர் ரெஹ்மான் ஆகியோரும் கட்சிகளின் தொடண்டர்களும் ராவல்பிண்டி ஊடக மையத்துக்கு முன்பாகக் கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் மரியும் அவுரங்கஸீப், தாரா அவுரங்கஸீப், டேனியல் சௌத்ரி, ஹனீப் அப்பாஸி ஆகியோரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பவனியாக வந்தவர்கள் பதாதைகளை ஏந்தியபடியும், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடியும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சிலர் ரொட்டிகளை மாலையாக அணிந்திருந்தனர்.

இங்கே உரையாற்றிய அவுரங்கஸீப், கோதுமையின் விலை அதிகரித்து செல்வதாகவும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் நிர்வகிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்றும் தற்கொலை செய்யும் அளவுக்கு மக்கள் விரக்தி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். வறுமை கோட்டுக்குக் கீழ் அறுபது சதவீதத்துக்கும் அதிகமானோர் பாகிஸ்தானில் வாழ்ந்து வருவதாக இவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 10/25/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை