ஹேவாஹெட்ட முல்லோயா மேற்பிரிவு தோட்டத்தில் மின்னொழுக்கினால் பாரிய தீ

Electric Short

ஹேவாஹெட்ட முல்லோயா மேற்பிரிவு தோட்டத்தில் 24 இலக்க குடியிருப்பு தொகுதியில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சூச்போட் நேற்று தீப்பற்றி எரிந்ததில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் முயற்சியினால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.சூச்போட்டில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டிற்கு கொண்டுவராவிடின் குடியிருப்பு தொகுதியிலுள்ள 16 வீடுகளும் முற்றாக சேதமடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இக் குடியிருப்புகளிலுள்ள மின்சார இணைப்புகள் மிகப் பழமையானதாகும். அத்தோடு தற்காலிகமாக பொருத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஆபத்தான நிலையிலுள்ள மின்னிணைப்புகளை சீரமைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

தெல்தோட்டை தினகரன் நிருபர்

Mon, 10/25/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை