சீனாவில் கொரோனா தீவிரம்: வூஹான் மரதன் ஒத்திவைப்பு

சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நேற்று நடைபெறவிருந்த வூஹான் மரதன் ஓட்டப்போட்டி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நேற்று 26 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்த நாடு கொரோனா தொற்றை முற்றாக இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் புதிய நோய்ப் பரவலுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

நோய்ப் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒட்டுமொத்த மக்களுக்கு வைரஸ் சோதனை மேற்கொள்வது மற்றும் கடும் முடக்க நிலைகளை கடைப்பிடிப்பதை அது செயற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த வைரஸ் முதல் முறை அடையாளம் காணப்பட்ட வூஹான் நகரில் இடம்பெறவிருந்த மரதன் ஓட்டப்போட்டியில் 26,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவிருந்தனர். வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையிலேயே அங்கு நோய் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

Mon, 10/25/2021 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை