இந்திய வெளியுறவு செயலர் இவ்வாரம் இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அடுத்த மாதம் முதற்பகுதியில் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

அவரது விஜயம், நாளை மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு இடையில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பு இடம்பெற்று 10 நாட்களுக்குப் பின்னர், இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை