பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது 85 ஆவது வயதில் இஸ்லாமாபாத்தில் காலமானார்.
ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச தலைநகராக உள்ள போபல் நகரில் பிறந்தவர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்ட ஏ.க்யூ.கான் உடல் நிலை அதன் பின்னர் சீர்கெட்டது.
அணு ஆயுதங்கள் உடைய முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு உடைய அப்துல் கதீர் கான் பாகிஸ்தானில் ஒரு தேசிய நாயகனாகவே பார்க்கப்படுகிறார்.
ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வித்திட்டவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
எனினும் வட கொரியா மற்றும் ஈரான் உட்பட நாடுகளுக்கு அணு ரகசியங்களை கடத்தியதான குற்றச்சாட்டுக்கு அவர் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn