துபாய் எக்ஸ்போ ஆரம்பம்

190க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகள், கலாசார நடவடிக்கைகள் போன்றவற்றைக் காட்டும் வகையில் திட்டமிடப்பட்ட துபாய் எக்ஸ்போ 2020 தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. கட்டடக் கலை, கலை, கலாச்சாரம், வணிகம், தொழில்முனைவு, கண்காட்சி, உணவு, தொழில்நுட்பம், கலை நிகழ்ச்சிகள், ஒட்டோமொபைல் என பல துறை சார்ந்த விடயங்கள் இந்த எக்ஸ்போவில் உள்ளதாக துபாய் எக்ஸ்போ 2020 வலைத்தளம் குறிப்பிடுகிறது.

இந்த நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இரவு ஆரம்பமானது. மார்ச் 2022 வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக துபாய் அரசு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நன்றாக இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 2.5 கோடி பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் பகுப்பாய்வாளர்களோ, உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த இலக்கை அடைய போராட வேண்டி இருக்கும் என கூறுகின்றனர்.

Sat, 10/02/2021 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை