பொருளாதார வீழ்ச்சி, பட்டினி நிலை நோக்கி ஆப்கானிஸ்தான்

பேச்சுவார்த்தைகளுக்கு முன்நிபந்தனை வேண்டாம் என தலிபான் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமான பின்னர் அந்நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதோடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் ஆப்கானியர் பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்களானால் அதற்கு உலகமே பொறுப்பேற்க வேண்டும் என தலிபான் பேச்சாளர் இனமுல்லா சமங்கானி தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளுடனான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் நாம் அக்கறையாக உள்ளோம். ஆனால் எமக்கு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட நிதி வளங்களை அமெரிக்காவும் சர்வதேச அமைப்புகளும் நிறுத்தி வைத்துள்ளன. எம்மீது அழுத்தம் பிரயோகிப்பது சரியான அணுகுமுறை அல்ல. ஏனெனில் பொருளாதார விடயங்களில் நாம் தனியாக செயல்பட முடியாது. பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வொன்றையே அடைய நாம் முயற்சிக்கிறோம் என இவர் கடந்த செவ்வாயன்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால் சர்வதேச சமூகம் முன்நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் தெரிவித்திருக்கும் இவர் எமது வளங்களை அவர்கள் தடுத்து வைப்பார்களானால் ஆப்கான் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். மனித உரிமை தத்துவங்களுக்கு இவை ஏற்புடையது இல்லை அல்லவா? என இவர் இந் நேர்காணலில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதே சமயம் காபூலில் பல வருடங்களாக இயங்கிவரும் நோர்வே உதவும் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஜான் ஈக்லன்ட் கடந்தவாரம் காபூலுக்கு விஜயம் செய்திருந்தார். ஆப்கானின் பொருளாதாரம் கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும் அங்கே வங்கிகளின் இயக்கம் ஸ்தம்பிதமடையலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கும் அவர் அந்நாட்டில் ஏற்படக்கூடிய பட்டினி மற்றும் நோய் நிலைமைகளை தவிர்ப்பதற்காக உதவும் நிறுவனங்கள் விரைந்து செயல்பட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

காபூலின் வர்த்தக வட்டாரங்களில் வெறிச்சோடிய நிலை காணப்படுவதாகவும் பல வர்த்தகர்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டதாகவும் ஏ.டி.எம். இயந்திரங்களின் முன் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சி, பட்டினி நிலை

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை