மூக்கினுள் தெளிக்கும் கொரோனா தடுப்புமருந்து ரஷ்யாவில் சோதனை

ரஷ்யா அதன் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை மூக்கினுள் தெளிக்கக்கூடிய ஒன்றாக உருவாக்கி வருகிறது.

பெரியவர்களிடையே அது இப்போது சோதிக்கப்பட்டு வருகிறது.

மூக்கினுள் தெளிக்கக்கூடிய அந்தத் தடுப்பு மருந்தை இரு முறை அளிக்க வேண்டும். ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மருந்தகத்தில் அது சோதிக்கப்படுகிறது.

அத்தகைய தடுப்புமருந்து, 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்குப் பொருத்தமான ஒன்று என ரஷ்ய அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தனர். கொரோனா தொற்று கடந்த ஆண்டில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பத்த விரைவிலேயே ஸ்புட்னிக் தடுப்பு மருந்து அறிமுகம செய்யப்பட்டது. எனினும் புதிய மருந்து பற்றிய சந்தேகங்கள் காரணமாக ரஷ்யாவின் பல நகரங்களில் அதனை விநியோகிப்பதில் மந்த நிலை ஏற்பட்டது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து வழங்குவதை விரைவுபடுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 

Thu, 10/14/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை