58,000 பட்டதாரிகளை நிரந்தரமாக்கல்; அமைச்சரவை உபகுழு ஆராய்வு

58,000 பட்டதாரிகளை நிரந்தரமாக்கல்; அமைச்சரவை உபகுழு ஆராய்வு-Graduates Permanent

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக் கொண்டுள்ள அமைச்சுக்கள் அவர்களை நிரந்தரமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் குறித அமைச்சரவை உபகுழு ஆராய்ந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் பயிற்சி பட்டதாரிகளாக 58,000 பேரை நியமித்துள்ளதுடன் அவர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இரண்டாவது தடவையாக கூடியுள்ளது.

அந்த அமைச்சரவை உப குழுவில் ஏனைய அங்கத்தவர்களாக அமைச்சர்கள் ஜனக பண்டார தென்னக்கோன், வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/14/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை