ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு

ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷிடா, இம்மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

நாட்டில் மேம்பட்டு வரும் நோய்ப்பரவல் நிலவரம் தேர்தலில் தமக்குச் சாதகமாக அமையும் என்று கிஷிடா நம்புகிறார்.

அத்துடன் பதவியேற்ற போது அவருக்கு மக்களிடையே நல்ல ஆதரவு தென்பட்டது. இருப்பினும் பதவியேற்ற ஒரு வாரத்துக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அவருக்குக் கிடைத்த ஆதரவு, முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவிற்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவு. என்.எச்.கே செய்தி நிறுவனம் அந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. 10 நாளுக்கு முன்னர் பதவியேற்ற கிஷிடா, தாம் முன்வைத்துள்ள கொள்கைகளுக்குத் தேர்தல் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற விரும்புவதாகக் கூறியுள்ளார்.  தேர்தலுக்கான பிரசாரங்கள் ஏற்கனவே பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டபோதும், வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதியே உத்தியோகபூர்வமாக பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படும். வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு தேர்தல் நடத்தப்பவுள்ளது.

Fri, 10/15/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை