ஆப்கானின் புதிய சூழல் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தை ஊக்குவிக்கும்

ரஷ்யப் பாதுகாப்பு சபை எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தற்போது காணப்படும் குழப்பமான அரசியல் நிலையின் காரணமாக பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், அகதிகள் வெளியேற்றம் என்பன மென்மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் சட்டவிரோத ஆயுத விற்பனை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் ரஷ்ய பாதுகாப்பு சபையின் பதில் செயலாளர் அலெக்சாண்டர் வெனிடிக்டேவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விஞ்ஞான கழகத்தின் ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே இதைத் தெரிவித்த அவர், அமெரிக்கா தன் நாடுகளுக்கோ அல்லது நோட்டோவுக்கோ இதுவரை வழங்கியிராத இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆப்கான் நிலைமைகள் பிராந்திய பாதுகாப்பு மட்டுமன்றி ரஷ்ய தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் காணப்படும் புதிய சூழல் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் செழித்து வளர உதவுவதாக இருக்கும் என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார்.

Fri, 10/15/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை