பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் காலமானார்

பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் காலமானார்-DR AG Husain Ismail Passed Away

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் நேற்று (14) காலமானார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003 தொடக்கம் - 2009 வரை ஆறு ஆண்டுகள் கடமையாற்றி, காத்திரமான பல சேவைகளை அன்னார் முன்னெடுத்திருந்தார்.

அவர், மலேசிய இஸ்லாமிக் சயன்ஸ் பல்கலைகழக பேராசிரியராகவும் இலங்கை திறந்த பல்கலைகழக பீடாதிபதியாகவும், தர்காநகர் இஷாஅதுல் இஸ்லாம் அநாதை இல்லத் தலைவராகவும் பதவிகளை வகித்தார். பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் ஜனாஸா நல்லடக்கம் பேருவலை மொல்லியமைலை பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.

Fri, 10/15/2021 - 07:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை