இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து நியமனம்

‘பென்டோரா ஆவணங்கள்’ -(Pandora Papers) - வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு இலங்கை இலஞ்ச ஊழல் ஆணையகம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவின் கீழ் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பென்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கும், அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி நேற்றுமுன் தினம் உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதி சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் எழுத்து மூலம் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை