ஒன்பது மாகாண சபைகளினதும் பதவிக்காலம் முடிந்து 3 வருடங்கள்

தேர்தலை விரைவில் நடத்துமாறு ஆணைக்குழு தலைவர் கோரல்

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை நடத்திச்செல்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ள அவர், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட தொகுதிகளில் முன்கூட்டியே வாக்களிக்கின்றமைக்கு சந்தர்ப்பமளித்தல் மற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகளை நிறுவுதல் ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து 03 வருடங்கள் கடந்துள்ளதுடன், அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக பரிந்துரையை வழங்குமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழு அண்மையில் கோரிக்கை விடுத்தது.

Fri, 10/01/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை