தெற்குடன் மீண்டும் தொலைபேசி இணைப்புக்கு வட கொரியா முடிவு

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், தென் கொரியாவுடன் அவசரத் தொலைபேசிச் சேவையைச் சீரமைக்க முன்வந்துள்ளார்.

இரு கொரியாக்களுக்கு இடையே உறவை மேம்படுத்த அடுத்த மாதம் அவசரத் தொலைபேசிச் சேவையைச் சீரமைக்கத் தயாராய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதம், இரு வழித் தொலைபேசிச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சில நாளில் வட கொரியா அதனைத் துண்டித்தது. பகைமையைத் தூண்டும் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சை அமெரிக்கா முன்வைப்பதாக வட கொரியா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று, வட கொரியா குறித்த அவசரச் சந்திப்பு ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த அவசர தொலைபேசி இணைப்பு கடந்த சில ஆண்டுகளால் பல தடவை துண்டிக்கப்படுவதும் மீண்டும் இணைக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.

2020 இல் வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான உச்சிமாநாடு தோல்வி அடைந்ததை அடுத்து தொடர்பாடல்களை மேம்படுத்துவதற்காக எல்லையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தை வட கொரியா வெடி வைத்து தகர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/01/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை