பாதிக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க தயார்

காணாமல் போனோர் பற்றிய அலுவலக தவிசாளர்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பினும் கூட, இவ்விவகாரத்திற்கு இயலுமானளவு விரைந்து தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரச கட்டமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் செயற்திறன்மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுவிடயத்தில் இயலுமான உதவிகளை வழங்குமாறு சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம். மேலும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்குத் தீவிர முனைப்புடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாராக இருக்கின்றது என தெரிவித்தார்.

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை