ரூ. 2,000 பணம் கிடைக்கவில்லையா?

மேன்முறையீடு செய்ய முடியும்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவு இதுவரை 50 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சு இக்கொடுப்பனவை பெறுவதற்கான தகுதியிருந்தும் பணம் கிடைக்காதவர்கள், தமது பிரதேச கிராம சேவகர் ஊடாக மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் 2,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்கி வருகிறது. இக்கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இக்கொடுப்பனவை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்களில் 50 வீதமானவர்களுக்கு நேற்று வரை அந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தக் கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் தத்தமது பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரி மூலம் மேன்முறையீடு செய்ய முடியுமென்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என். எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை