அமைச்சரவை தீர்மானத்தை ஆசிரியர் சங்கம் நிராகரிப்பு

எதிர்ப்பை வெளியிட்டு கருத்து முன்வைப்பு

அமைச்சரவை முன்மொழிந்த 5000 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை எனவும் தமது கோரிக்கையான சுபோதினி பரிந்துரையை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமெனவும் அதுவரையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்திருப்பது எம்மை ஏமாற்றும் செயல்.

இது ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. எனவே நாம் அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளபோவதில்லை. இதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை