இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

சீன அபிவிருத்தி வங்கியும் 300 மில். கடனுதவி

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பைப் பலப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியன இலங்கைக்கு 1,080 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தினால் 780 மில்லியன் அமெரிக்க டொலரும் சீன அபிவிருத்தி வங்கியின் மூலம் கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணமாக மாற்றக்கூடிய SDR விஷேட மீள் செலுத்தல் உரித்திற்கிணங்க இத்தொகை நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் சீன அபிவிருத்தி வங்கியின் கடன்தொகை விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை