தாய்வான் பாதுகாப்பு வலயம்: சீன விமானங்கள் ஊடுருவல்

சீனாவின் மிகப்பெரிய ஊடுருவல் ஒன்றாக தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சீன இராணுவ விமானங்கள் நுழைந்ததாக தாய்வான் குறிப்பிட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அடையாள வலயம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் விமானங்கள் மற்றும் அணு திறன் கொண்ட குண்டு வீசும் விமானங்கள் உட்பட 19 விமானங்கள் ஊடுருவியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தாய்வானுக்கு அருகே ஓர் ஆண்டுக்கு மேலா சீன விமானப் படை செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தாய்வான் குற்றம்சாட்டுகிறது.

தாய்வானை தமது நாட்டின் பிரிந்து சென்ற ஒரு மாகாணமாகவே சீனா கருதுகிறது. ஆனால் தாய்வான் தம்மை ஓர் இறைமை கொண்ட நாடாக குறிப்பிடுகிறது.

இதில் அணு குண்டுகளை எடுத்துச் செல்லக் கூடியதும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு விமானமாகவும் உள்ள நான்கு எச்-6 குண்டு வீசும் விமானங்களையும் சீனா ஈடுபடுத்தியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

இது பற்றி சீனா எந்த உத்தியோகபூர்வ பதிலையும் அளிக்கவில்லை.

Tue, 09/07/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை