அவசரகாலச் சட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

பொது மக்களை பாதுகாக்க ஜனாதிபதி எடுத்துள்ள அவசரகால நிலைமை எதிர்க்கட்சியினர் மாத்திரமே எதிர்க்கின்றனர். மாறாக மக்கள் எதிர்க்கவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகளை கொண்டுவர முடியும். தேசியப் பாதுகாப்பில் உணவு பாதுகாப்பு என்பது பிரதான அங்கமாகும். நாம் ஒரு விவசாய நாடாகதான் வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தோம்.30 வருடகால யுத்தத்திற்கு முகங் கொடுத்திருந்தோம். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவரும் பட்டினியால் உயிரிழந்திருக்கவில்லை.

1974இல் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் நாட்டில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள மக்கள் செயல்பட்டிருந்தனர். 1977ஆம் ஆண்டின் பின்னர் திறந்த பொருளாதாரத்தால் நாட்டின் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தது. இதனால் எமது அந்நிய செலாவணியும் வீழ்ச்சியடைந்தது. 1977ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமை தொடர்ந்திருந்தால் எமது நாடு விவசாயத்தில் தன்னிறவடைந்திருக்குமென பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் தொற்றின் பின்னர் இறக்குமதியை மாத்திரம் நம்பிய பொருளாதாரமாக மாறியதால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். வெளிநாட்டில் இருந்தவர்கள் நாட்டுக்கு வந்தனர். சுற்றுலாத்துறையும் வீழ்ச்சிகண்டது. எமது நாட்டின் தினசரி ஆதாயம் 41 பில்லியனாகும். நாடு முடப்பட்டதால் தினமும் 15 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பழங்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தினோம். உள்நாட்டு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றை பயன்படுத்தி பொருட்களை பயன்படுத்தி அவற்றின் விலைகளை அதிகரிக்க முற்பட்டுள்ளமை மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Tue, 09/07/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை