இத்தாலியின் பொலொன்ஞா பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் ஆரம்ப உரையாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு

இத்தாலியின் பொலொன்ஞா பல்கலைக்கழகத்தில் அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் உயரிய மாநாட்டுக்கே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநாட்டின் முதல் அமர்வில் கலந்து கொண்டு பேசுவதற்கும் பிரதமருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்கும், நாட்டுத் தலைவர்களுக்கும் தென்னாசிய வலயத்தில் மாத்திரமன்றி, சர்வதேசத்திற்கு முன்பாக இன்று நம் அனைவருக்கும் பெருமைகொள்ள முடியும் விதத்திலான அழைப்பிதழ் ஒன்று கிடைத்துள்ளது.

இத்தாலியின் பொலொன்ஞா பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ளது, பொலொன்ஞா பல்கலைக்கழகம் என்பது ஐரோப்பாவின் மிகப் பழைமைவாய்ந்ததாகும். உலக அறிஞர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை விடவும் பொலொன்ஞா பல்கலைக்கழகம் மிகப் பழைமைவாய்ந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மாநாட்டின் தொடக்க உரையை நடத்துவதற்கான அழைப்பே விடுக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பல்வேறு  இராஜதந்திரத் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இலங்கை தொடர்பில் பல்வேறு சக்திகள் போலியான விம்பத்தை தோற்றுவித்து பங்கம் ஏற்படும் வகையிலான பிரசாரங்களை செய்துவரும் இச் சந்தர்ப்பத்தில் அவற்றை நீக்கி, நாட்டின் யதார்த்த உண்மையை ஐரோப்பாவுக்கு முன்பாக முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இது அமைகிறது.

Tue, 09/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை