ஆப்கான் குழப்பம்: நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் விலகல்

கடந்த மாதம் இடம்பெற்ற ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பிலான சர்ச்சை காரணமாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் சிக்ரிட் காக் பதவி விலகியுள்ளார்.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக பதவி விலகும் முதல் மேற்கத்தேச அரச அதிகாரி இவராவார்.

வெளியேற்ற நடவடிக்கையில் அரசு மந்தமாகச் செயற்பட்டு பல ஆப்கானியர்களையும் கைவிட்டதாக குற்றம்சாட்டும் நெதர்லாந்து எம்.பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தனர்.

இந்நிலையில் தமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் காக், எம்.பிக்களின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் முன்னேற்றம் பற்றிய எச்சரிக்கைக்கு மத்தியில் அரசு மந்தமாக செயற்பட்டது பற்றி தாம் அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் ஆப்கானில் இருந்து சுமார் 2,000 பேரை வெளியேற்றுவதற்கு நெதர்லாந்தால் முடியுமானது.

ஆனால் நெதர்லாந்து துருப்புகளுக்கு உரை பெயர்ப்பாளர்களாக பணியாற்றிய நூற்றுக்கணக்கான உள்ளூர் ஊழியர்கள் இந்த வெளியேற்ற நடவடிக்கையில் கைவிடப்பட்டப்பட்டனர்.

 

Sat, 09/18/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை