கொவிட்-19: வடக்கு மசிடோனிய மருத்துவமனையில் தீ: 10 பேர் பலி

வடக்கு மசிடோனியாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டெடோவோ நகரில் பிரதான வீதி ஒன்றுக்கு அருகில் இருக்கும் அந்தக் கட்டடத்தில் இருந்து தீப்பிழம்பு மற்றும் கறும்புகை வெளியாகும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு தற்காலிக வசதி ஒன்றாக அமைக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை இரவு தீ பரவும்போது அங்கு எத்தனை நோயாளர்கள் இருந்தார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் பலர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார அமைச்சர் வென்கோ பிலிப்டே குறிப்பிட்டுள்ளார். ‘காயமடைந்தவர்களின் உயிரை காக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்’ என்று அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மசிடோனியாவில் 180,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 6,153 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 09/10/2021 - 00:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை