ஆட்சியில் பெண்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்

ஆப்கானிய மகளிர் போர்க் கொடி

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தில் எல்லா மட்டங்களிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என ஆப்கானிய மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆப்கானின் பல பகுதிகளில் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் தமக்கு பங்கு வழங்கப்பட வேண்டுமென போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்களன்று மஸார் - ஈ - ஷரீப் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு அதிகாரத்தில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை வலியுறுத்திய பெண்கள், பெண்களின் பங்களிப்பற்ற புதிய அரசு அர்த்தமற்றதாகிவிடும் என்றனர்.

உடலை முழுமையாக மூடும் நீலநிற பாரம்பரிய ஆடை தலிபான்கள் விரும்பும் மகளிருக்கான உடையாக இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதை அணிந்திருக்கவில்லை என கம்மா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆடையை பெண்கள் கட்டாயமாக அணியவேண்டும் என இதுவரை தலிபான்கள் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 09/10/2021 - 00:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை