டெல்டா பரவல்: நியூசிலாந்து முடக்கநிலை மேலும் நீடிப்பு

நியூசிலாந்தில் டெல்டா கொரோனா திரிபு இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் நாட்டில் முடக்க நிலையை மேலும் நீடித்துள்ளார்.

இந்த வைரஸ் திரிபு வேகமாக பரவுவதால் கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தளர்த்த முடியாது என்று ஆர்டன் தெரிவித்தார். நியூசிலாந்தில் ஆறு மாதங்களாக உள்நாட்டில் தொற்றுச் சம்பவங்கள் இல்லாமல் இருந்த நிலையிலேயே ஒக்லாந்தில் வைரஸ் கொத்தணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

‘டெல்டா எம்மை பின்தள்ளி முன்னேற ஆரம்பித்துள்ளது. நாம் முடியுமான விரைவில் அதனை பிடிக்க வேண்டும். இந்த தொற்றின் உச்சத்தை நாம் இன்னும் தொடவில்லை என்று நினைக்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் நேற்று மேலும் 35 புதிய தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் மொத்த தொற்றுச் சம்பங்கள் 107 ஆக அதிகரித்துள்ளது. நெருக்கமான தொடர்பில் இருக்கும் 13,000 பேர் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tue, 08/24/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை