இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரயத்தனம்

காஷ்மீரை முன்வைத்து உலகளாவிய முயற்சி

ஜம்மு – காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய பிரசாரங்களை மேற்கொள்வதற்கு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சின் தகவல்துறை பிரிவு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் இப் பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கிளாஸ்கோ தகவல்களை ஆதாரம் காட்டி ஏ என் ஐ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

யொம் ஈ ஸ்டேஹ்சால் (ஒடுக்கப்படும் தினம்) என அழைக்கப்படும் இந்த பிரசாரத்திட்டத்தின் கீழ் உலக நாடுகளின் இந்தியத் தூதரகங்களின் எதிரே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை இதன் பொருட்டு பயன்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும், பாக். அரசு ஆதரவான சமூக செயற்பாட்டு அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், இராஜதந்திரிகள், பாகிஸ்தான் ஆதரவு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் என்போரையும் இப்பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

‘காஷ்மீரிமக்களுடன் கைகோர்த்து நிற்போம்,’ ‘காஷ்மீரின் எதிர்காலம் பாகிஸ்தான் கைகளிலே’, ‘பாகிஸ்தானின் இதய நாளமே காஷ்மீர்தான்’ போன்ற கோஷங்களை இப்பிரசாரம் முன்நிறுத்தும். இவ்வாறான இருபது ட்வீட்டர் தகவல்கள் உலக பாகிஸ்தான் தூதரகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்தப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா காஷ்மீரை சுற்றிவளைத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்துவதே இதன் நோக்குமாகும் என இந்தியத் தரப்பு கருதுகிறது.

Wed, 08/04/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை