பாகிஸ்தானுடனான சுமுக உறவுக்கு பயங்கரவாதமற்ற சூழல் அவசியம்

பாகிஸ்தானுடன் சமாதான பூர்வமானதும் சுமுகமானதுமான ஒரு உறவை பயங்கரவாத சூழல் அற்றதாக மேற்கொள்ளவே இந்தியா விரும்புவதாகவும் பயங்கரவாதம், பகையுணர்வு,வன்முறையற்ற நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமென்றும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுவர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தகையஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பாகும் என்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஜூலை மாதத்துக்கான தலைவராக பிரெஞ்சு பிரதிநிதியிடமிருந்து பொறுப்பேற்றிருந்த திரிமூர்த்தி, இந்தியா மீது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தமது எல்லைப் பகுதிகளில் இருந்து நடத்தப்படாததை பாகிஸ்தான் பொறுப்புடன் உறுதி செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனது ஒரு மாத பதவிக் காலத்தின் போது கடல்கள் பாதுகாப்பு,சமாதானம் பேணல் மற்றும் பயங்கரவாத தடுப்பு என்பன தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார்.

Mon, 08/09/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை