பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவக் கூடாது: பாக். முன்னாள் தூதுவர் காட்டம்

தலிபான்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் போக்கை இஸ்லாமாபாத் உடனடியாகநிறுத்த வேண்டுமெனவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் கைவிடவேண்டுமென உலக நாடுகள் வற்புறுத்தவேண்டுமெனவும் பாகிஸ்தான் இராஜதந்திரி ஹக்கானிவேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவிலும், இலங்கையிலும் தூதுவராக பணியாற்றியுள்ள ஹக்கானி சி.என்.என். செய்திச் சேவைக்குவழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர், ஆப்கானிய யுத்தத்தின் பின்புலத்தில் நின்று செயல்படும் பாகிஸ்தானை சர்வதேச சமூகம் ஏன் கண்டிப்பதில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதோடுபத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எதிராகசெயல்படுவதற்கு அனுமதித்தும் வருகிறது. பாகிஸ்தானின் வெளியுறவுகொள்கையில் பயங்கரவாதமும் ஒன்று.

அதன் இராணுவம் இக்குழுக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இன்றையநிலை நீடிக்குமானால் ஆப்கானிஸ்தானில் தீவிர உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் உள்ளது. எனினும் இவ் விடயத்தில் அமெரிக்கா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

இன்றையமோசமான சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டுநடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் தலிபான்கள் அல்கைதாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளனர் என்று ஹக்கானி தனது நேர்காணலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேசமயம் பாகிஸ்தானுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான தொடர்புகளை சுட்டிக்காட்டி கடுமையாக அந்நாட்டு அரசாங்கத்தைக் கண்டித்துள்ள ஆப்கான் பிரதமர் அஷ்ரஃப் கானி, கடந்த மாதம் மட்டும் பத்தாயிரம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானுக்குள் நுழைந்திருப்பதாகக் கூறியுள்ளதோடு பயங்கரவாதிகளுடனான தொடர்புகளை இஸ்லாமாபாத் துண்டித்துக் கொள்ளவேண்டுமென கோரியுள்ளார். பயங்கரவாதத்துடனான தொடர்பை இஸ்லாமாபாத் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

Mon, 08/09/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை