யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முறிகண்டி ஆலயத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

அமைச்சர் டக்ளஸ்

யுத்தத்தின் காரணமாக உருக்குலைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முறிகண்டி ஆலயத்தின் புனிதத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

மேலும், அன்னதான மண்டபம் அமைப்பதற்கு காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக இந்து கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்த சாசன மத விவகாரங்களுக்கான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் ஆகியோரினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வரலாற்றுப் பெருமை மிக்க ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பதற்கு தனது ஒத்துழைப்புக் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Mon, 08/09/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை