ஐ.தே.க முன்னாள் எம்.பி டியூட்டர் கொவிட்டுக்கு பலி

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூட்டர் குணசேகர கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 86 ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் தீவிர ஆதரவாளரான டியூட்டர் குணசேகர, 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மஹர தேர்தல் தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை