நுவரெலியாவில் 26,690 பேருக்கு ரூ.2000 கொடுப்பனவு

நுவரெலியா மாவட்டத்தில் 26,690 பேருக்கு 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சமுர்த்தி பெறுவோர், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மற்றும் மாதாந்த சம்பளத்தை பெறுவோர் 2,000 ரூபாவுக்கான பட்டியலில் இம்முறை சேர்க்கப்படவில்லை. ஊரடங்கு காலப்பகுதியில் நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கே அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 26,690 பேருக்கான நிதியே ஒதுக்கப்பட்டு நிவாரணமாக 2,000 வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவின் ஊடாக கட்டம் கட்டமாக இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என்றார்.

 

தலவாக்கலை குறூப் நிருபர்

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை