மெல்பர்ன் நகரில் முடக்கம் நீடிப்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்பர்ன் நகரில், முடக்கநிலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு, முடக்கநிலை இம்மாதம் 19ஆம் திகதி முடிவுபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, அந்நகரில் டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். டெல்டா வகை வைரஸ் எளிதில் பலரிடம் பரவக்கூடியது.

முடக்கநிலையை இப்போதே தளர்த்தினால், வைரஸ் பரவல் நிலை சிட்னி நகரைப் போல் கடுமையாகும் என விக்டோரியா மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூ செய்தியாளர்களிடம் கூறினார்.  

மறுபுறம் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வைரஸ் பரவல் மோசமடைந்துள்ளது. அங்கு மிக அதிகமாக, 24 மணி நேர இடைவெளியில் புதிதாக 356 பேருக்குக் நோய் தொற்று உறுதியானது.

அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், பாதிக்கப்பட்டிருந்தபோது சமூகத்தில் நடமாடியுள்ளனர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடப்பில் உள்ள முடக்கநிலை மேலும் சில வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மக்கள்தொகையில் குறைந்தது 70 வீதத்தினருக்கு ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட அவுஸ்திரேலியா இலக்கு கொண்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மையுடன் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில், தற்போது 22 வீதத்தினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மொடர்னா நிறுவனத்திடமிருந்து 1 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்பு மருந்துகள் இம்மாத இறுதியில் அவுஸ்திரேலியா சென்று சேரவுள்ளன.

 

Thu, 08/12/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை