எமது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் -ஆசிரியர் சங்க செயலர் ஸ்டாலின்

அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எமது தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் 30 நாட்களாகின்றன. அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்.

இதன்படி மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமாக கல்வி கற்பித்தல், (க.பொ.த.) சாதாரண தர செயல் முறை பரீட்சைக்கு பங்கேற்பது ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளோம். அரச, அரை அரசாங்க தொழிற்சங்கங்களை எம்முடன் இணைத்துகொண்டு போராடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

 

 

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை