வடக்கில் உயிர்களை காப்பாற்ற படையினர் இரத்ததான முகாம்

நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் ஹிங்குராகொடவில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தன.

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த மாதிரிகளின் கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து அவற்றை நிவர்த்தி செய்யும்வகையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 100 இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹிங்குரகொட விமானப்படைத் தளத்தில் உள்ள விமானப்படை வீரர்கள் இரத்ததான தேவையை பூர்த்தி செய்வதற்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Tue, 08/24/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை