நேற்று முதல் ஓகஸ்ட் 31 வரை அவசர விடயங்களுக்காக மட்டுமே உயர் நீதிமன்றம் கூடும்

நாட்டில் கொவிட் நிலைமை காரணமாக நேற்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் 'அவசர' விடயங்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவசரகால விவகாரங்கள் மாத்திரம், திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

அவசர விடயங்கள் தொடர்பான விசாரணைகள், நீதிமன்றத்தில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.இதன்போது அனைத்து சட்டத்தரணிகளும் கொவிட் பரவுவதை தடுக்க சுகாதாரஅதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முதல் எதிர்வரும் 31 வரை திட்டமிடப்பட்ட விசாரணைகளுக்காக புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tue, 08/24/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை