கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதில் சிறந்த நாடாக இலங்கை

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதில் சிறந்த நாடாக இலங்கை உள்ளமைக்கான அங்கீகாரத்தை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உலகின் பலமான நாடுகளும் கொவிட் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவை தவிர ஏனைய அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா மாத்திரமே 2 சதவீதம் என்ற நேர் பொருளாதார வளர்ச்சியை 2020 இல் காட்டியுள்ளது. அமெரிக்கா, ஜேர்மன், பிரிட்டன் என பெரிய நாடுகளும், சிறிய பொருளாதார நாடுகளும் மறை பொருளாதார வளர்ச்சியையே கடந்த ஆண்டில் காட்டியுள்ளன.

கொவிட் தடுப்பூசியை வழங்குவதில்; சிறந்த நாடாக இலங்கை உள்ளமைக்கான அங்கீகாரத்தை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது. உலகில் குறைந்தளவான மரணங்கள் பதிவான நாடாகவும் இலங்கை உள்ளது. நாட்டில் 30.5 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி உலகில் முன்னணி நாடாக இலங்கை உள்ளது. சிங்களம், முஸ்லிம், தமிழ் என எவ்வித பாரபட்சமும் காட்டாது தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Wed, 08/04/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை