சுயஸ் கால்வாயை முடக்கியிருந்த இராட்சத கப்பல் மீண்டும் பயணம்

கடந்த மார்ச் மாதம் சுயஸ் கால்வாயில் சிக்கி சர்வதேச வர்த்தகத்திற்கு தடங்கலை ஏற்படுத்திய எவர் கிரீன் இராட்சத கொள்கலன் கப்பல் எந்த இடையூறும் இன்றி அந்தக் கால்வாயை மீண்டும் கடந்து சென்றுள்ளது.

அந்தக் கப்பல் மத்தியதரைக் கடலில் இருந்து செங்கடலுக்கு பயணித்ததாக சுயஸ் கால்வாய் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல் ஐரோப்பாவில் தனது சரக்குகளை இறக்கி தற்போது ஆசியாவை நோக்கி செல்கிறது.

இதில் சுயஸ் கால்வாயில் ஆறு நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னரே அந்தக் கப்பல் மீண்டும் சுயஸ் கால்வாயில் பயணித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன், 18,300 கொள்கலன்களை ரொட்டர்டம், பிளிக்ஸ்டவுன் மற்றும் ஹம்பர்க்கில் இறக்கிவிட்டு தற்போது சீனாவை நோக்கி பயணிக்கிறது. 400 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் கடந்த மார்ச் 23 ஆம் திகதி கடும் காற்றுக்கு மத்தியில் சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கிக்கொண்டதால் நூற்றுக்கணக்கான கப்பல்களின் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

Mon, 08/23/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை