அவுஸ்திரேலியாவில் கொரோனா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: பலர் கைது

அவுஸ்திரேலியாவின் 2 மிகப்பெரிய நகரங்களில் நடைபெற்ற கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நூற்றுக்கணக்கானோரைக் கைதுசெய்துள்ளனர்.

ஒரேநாளில் நாடு முழுவதும் பதிவான கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்கியுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

மெல்பர்ன் நகரின் தெருக்களில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, மிளகாய் ரசாயனத்தை அதிகாரிகள் பயன்படுத்தினர். விக்டோரியா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு நடப்பில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாய் 61 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிட்னி நகரிலும் மோதல்கள் தொடர்கின்றன. மத்திய பகுதியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,500க்கும் கூடுதலான பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர். சிட்னியில் சுமார் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காகச் சுமார் 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிட்னியில் தான் ஆக அதிகமான நோய்ச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

Mon, 08/23/2021 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை