உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: உண்மைகளை மறைத்து கைகழுவ முற்பட்டால் இறைவன் அதற்கு இடமளிக்கமாட்டார்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளிவந்துள்ள விடயங்களுக்கு மேலதிகமாக வெளிவராத இன்னொரு பக்கமும் உள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மைகளை எவராவது மறைக்க முற்படுவார்களானால் அவர்கள் மனச்சாட்சியுடன் செயற்படுவதற்கான பலத்தை வழங்குமாறு தாம் இறைவனிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 28 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்று முன்தினம் நாடளாவிய ரீதியில் அமைதி ஆர்ப்பாட்டங்களும் நினைவுத் திருப்பலி மற்றும் அஞ்சலி அனுஷ்டானங்களும் கத்தோலிக்க ஆயர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதனையொட்டி கொழும்பு புஞ்சி பொரளையிலுள்ள பேராயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற விசேட மத வழிபாடுகளின் போதே பேராயர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: மேற்படி தாக்குதல் சம்பவங்களை மறைத்து அதனை கைகழுவி விட சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிப்பார்களானால் இறைவன் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Mon, 08/23/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை