கருவாடு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்தலாம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! 

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும்.  

உள்ளூர் கருவாட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டிய அதேவேளை, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நியாயமான விலையில் கருவாடு கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையிலும் கருவாடு இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கருவாடு இறக்குமதியாளர் சங்கப் பிரதிதிநிகளை நேற்று முன்தினம்  சந்தித்து கலந்துரையாடிய போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த கலந்துரையாடலின்போது குறித்தத் திட்டத்தினூடாக அந்நியச் செலாவணியை நாட்டிற்கு மீதப்படுத்துவதுடன் உள்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறித்த இலக்கை எட்டுவதற்காக, கருவாடு உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் நவீன் தொழில்நுட்பங்களையும் இயந்திர உபகரணங்களையும் உள்வாங்குவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. 

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Sat, 07/31/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை