சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது மரண பரிசோதனையின் இறுதி அறிக்கை தயார்?

விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்

சிறுமி ஹிஷாலினியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் இரண்டாவது மரண பரிசோதனை அண்மையில் இடம்பெற்றது. இதற்கமைய இது குறித்த இறுதி அறிக்கை தற்போது தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின் போது பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது மரண பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிக் கோரி பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் அந்த மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறுமி ஹிஷாலினிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Mon, 08/09/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை