பொதுப் போக்குவரத்துச் சேவை மிக அவதானமிக்க நிலையில்

பொதுப் போக்குவரத்துச் சேவை தற்போதைய நிலையில் பாதுகாப்பற்ற தன்மையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பயணிகள் சமூக இடைவெளியை பேணி பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இயலுமான அளவு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும் ரயில்வே ஊழியர்கள் பலர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால், இந்நிலைமை தொடர்ந்தால் ரயில்வே போக்குவரத்து சேவையை முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை குறிப்பாக ரயில் போக்குவரத்து சேவை அவதானமிக்கதாக காணப்படுகிறது.

கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த காலங்களை விட தற்போது அதி தீவிரமாக பரவலடைந்துள்ளது. இதனால் மருத்துவ துறைக்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான நிலையில் பொது போக்குவரத்து சேவை தற்போது நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுகிறது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 08/09/2021 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை