ஹாலி – எலை குயின்ஸ்டவுன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில்

ஹாலி – எலைப் பகுதியின் குயின்ஸ்டவுன் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் ஐநூறு பேர் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபடவுள்ளனர்.

வாரத்தில் முதல் மூன்று தினங்களுக்கு தலா ஆயிரம் ரூபா என்றடிப்படையில் தினச் சம்பளமும், ஏனைய மூன்று தினங்களுக்கு தேயிலைத்தளிர் கிலோவொன்றிற்கு ஐம்பது ரூபா என்றடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் தோட்ட நிருவாகம் கூறியதையடுத்தே, தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் இறங்கியுள்ளனர்.

வாரத்தில் ஆறு தினங்களுக்கும் தொழில் வழங்க வேண்டும். அவ் ஆறு தினங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் என்றடிப்படையில் தினச் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்பணி பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றது.

மல்வத்தவெலி பிளான்டேசன் பொறுப்பிலுள்ள குயின்ஸ்டவுன் லோவர் பிரிவு ,மேற்பிரிவு , கிரேக்மோர் , செரண்டிப், எல்வட்டன் போன்ற ஐந்து தோட்டப் பிரிவுகளின் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடருமென்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர்

Mon, 08/30/2021 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை