பிறை எப்.எம் வானொலி 90.1 என்ற புதிய அலை வரிசையில்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அக்கரைப்பற்றில் இயங்கிவரும் பிராந்திய வானொலியான பிறை எப்.எம் சுமார் 15 வருட காலமாக எப்.எம்.102.3 அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்தது.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொறோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்துமே திண்டாடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில், இலங்கையில் முக்கியமாக மாணவர்களின் கல்வி நிலை பாரிய பின்னடைவை எதிர்நோக்கிவருகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட கல்வி நிலையினை மீண்டும் முன்னெடுத்துச் செல்லும் முகமாக வானொலி அலைவரிசைகள் ஊடாக கல்வி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு கடந்த 16ஆம் திகதி கல்வி நிகழ்ச்சிகளை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக பிறை எப்.எம் பிராந்திய வானொலி சேவையில் ஒலிபரப்பாகிவந்த எப்.எம் 102.3 அலைவரிசை கல்வி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றீடாக பிறை எப்.எம் பிராந்திய வானொலிக்கு புதிதாக எப்.எம் 90.1 அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அலைவரிசையில் பிறை எப்.எம் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்பாகி வருகின்றன.

பிராந்திய வானொலி பிறை எப்.எம் இன் வழமையான நிகழ்ச்சிகளை 90.1 அவைரிசையில் நேயர்கள் கேட்டு மகிழலாம்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

 
Thu, 08/19/2021 - 19:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை