10 நாட்களின் பின் வந்த கேஸ் சிலிண்டர்; ஹட்டனில் நீண்ட வரிசையில் மக்கள்

10 நாட்களின் பின் வந்த கேஸ் சிலிண்டர்; ஹட்டனில் நீண்ட வரிசையில் மக்கள்-Gas Cylinder Shortage in Hatton

ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) வியாழக்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப லிட்ரோ சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

10 நாட்களின் பின் வந்த கேஸ் சிலிண்டர்; ஹட்டனில் நீண்ட வரிசையில் மக்கள்-Gas Cylinder Shortage in Hatton

இதனால் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மை நிலை ஏற்பட்டிருந்தது.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் தெரிவித்தார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்) 

Thu, 08/19/2021 - 19:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை